60 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்த பால்கன் 9 ராக்கெட்

ஒரே நேரத்தில் 60 செயற்கைகோள்களுடன் பால்கன் 9 என்ற ராக்கெட்டை அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நாசாவிற்கு இணையாக விண்வெளியில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் சீரான மற்றும் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக ஸ்டார் லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டது.

தலா 227 கிலோ எடையுள்ள 60 செயற்கைகோள்களை பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த ஸ்பேஸ் எக்ஸ் கடந்த வாரத்தில் திட்டமிட்டது. ஆனால் செயற்கைகோள் மென்பொருளை மேம்படுத்தும் பணி மற்றும் பரிசோதனைகள் காரணமாக ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் பணி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் பரிசோதனைகள் முழுமையாக முடிவடைந்து, தற்போது பால்கன் 9 ராக்கெட், 60 செயற்கைகோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்துள்ளது.

Exit mobile version