குழந்தை விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு ஜாமீன் மறுப்பு

குழந்தை விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட அருள்சாமி உட்பட 3 பேருக்கு ஜாமின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நாமக்கல் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய அமுதவல்லி, பிறந்த குழந்தைகளை விற்பனை செய்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய அருள்சாமி, ரேகா, நந்தகுமார் ஆகியோர் ஏப்ரல் 24 ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், விசாரணை ஆரம்பகட்ட நிலையில் உள்ளதால், ஜாமின் வழங்க முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Exit mobile version