அயோத்தி வழக்கின் விசாரணையை மேற்கொள்ள கூடுதல் நேரத்தை உச்சநீதிமன்றம் ஒதுக்கியுள்ளது.
வழக்கின் விசாரணை மாலை 4 மணியுடன் முடிவடையும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல், மாலை 5 மணி வரை வழக்கின் விசாரணை நடக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 18ந் தேதியுடன் வாதங்கள் நிறைவடைவதால் உச்சநீதிமன்றம் கூடுதல் நேரம் ஒதுக்கியுள்ளது.