அயோத்தி நிலம் வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் முக்கிய முடிவு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் மத்தியஸ்தம் மூலம் பேசி தீர்த்துக்கொள்ள உத்தரவிடுவது தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய முடிவு எடுக்க உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2 புள்ளி 77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் மத்தியஸ்தம் மூலம் பேசி தீர்வு காண உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அறிவுறுத்தியது. ஆனால் அதனை ராம் லல்லா அமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் சன்னி வக்பு வாரியம் மற்றும் நிர்மோகி அகாரா அமைப்புகள், மத்தியஸ்தம் செய்ய ஒப்புக்கொண்டன. இந்தநிலையில் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்க உள்ளது.

Exit mobile version