அயோத்தி வழக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் தினமும் விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
அயோத்தி வழக்கில் சமரச குழுவின் பேச்சு வார்த்தையில் எந்தவிட உடன்பாடும் எட்டப்படாததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே பேசி தீர்வு காண்பதற்காக சமரச குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இரு தரப்பினரிடமும் நடத்திய பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட குழு தனது அறிக்கையை அளித்துள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது. ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு தினமும் விசாரிக்க உள்ளது.