சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச புகாரை பழைய அதிகாரிகள் குழுவே விசாரிக்கும் என்று சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா அதிரடியாக அறிவித்துள்ளார். அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, நேற்று அவர் மீண்டும் சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனையடுத்து இடைக்கால இயக்குனராக இருந்த நாகேஸ்வர் ராவ் பிறப்பித்திருந்த அதிகாரிகளின் இடமாற்ற உத்தரவுகளை பதவியேற்ற சில மணி நேரங்களில் அலோக் வர்மா ரத்து செய்தார். அலோக் வர்மாவின் உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தான மீதான ஊழல் புகாரையும், ஏற்கனவே விசாரித்த அதிகாரிகள் குழு தான் மீண்டும் விசாரிக்கும் என்று அலோக் வர்மா உத்தரவிட்டிருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.