சபரிமலையில் 52 வயது பெண் மீது தாக்குதல் -போராட்டம் நடத்திய 200 பேர் மீது வழக்கு

சபரிமலைக்கு வந்த 52 வயது பெண்னை தாக்கியதாக பக்தர் ஒருவரை கைது செய்துள்ள போலீசார், போராட்டம் நடத்திய 200 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 5-ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்ட போது, திருச்சூரை சேர்ந்த லலிதா என்ற 52 வயது பெண் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சபரிமலைக்கு வந்தார். அப்போது அங்கே கூடியிருந்த பக்தர்கள் அவரை முற்றுகையிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது, தனது வயது சான்றிதழை காட்டியதால் அவரை மீட்ட போலீசார், லதாவை பத்திரமாக கோயிலுக்கு அழைத்துச்சென்றனர்.

இதனிடையே லலிதாவின் மீது தாக்குதல் நடத்தியதாக பத்தினம்திட்டா மாவட்டம் எழந்தூரைச் சேர்ந்த இளைஞர் சூரஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version