சீனாவில் கோலாகலமாக துவங்கியது "ஆசிய கலாச்சாரத் திருவிழா"

உலகெங்கிலும் இருந்து 47 நாடுகளின் கலைஞர்கள் பங்கேற்றுள்ள ஆசிய கலாச்சாரத் திருவிழா சீனாவில் கோலாகலமாக துவங்கியுள்ளது.

சீனாவில் ஆசிய கலாச்சாரத் திருவிழா துவங்கியுள்ளது. ஆசியாவின் கனவு மற்றும் இளைஞர்களின் கொண்டாட்டம் என்ற தலைப்பில் வரும் 22ம் தேதிவரை நடைபெறவுள்ள இந்த திருவிழா உலகின் பல்வேறு நாடுகளின் கலாச்சார நிகழ்வுகளின் சங்கமமாக நடைபெறுகிறது.

திருவிழாவில் பல்வேறு நாடுகளின் கலாச்சார நிகழ்வுகள் ஒரே இடத்தில் வண்ணமயமாக அரங்கேறின. ஆசியாவின் நாகரிகம், கலாச்சாரம் போன்ற நிகழ்வுகளை பிரதிபலிக்கும்வகையில் நடத்தப்படும் இந்த திருவிழாவை சீன அதிபர் ஸீ ஜின்பிங் துவக்கி வைத்தார். பிரபல நடிகர் ஜாக்கிசான் பங்கேற்று குங்ஃபூ சண்டையின் சில அசைவுகளை செய்து காட்டினார்.

Exit mobile version