கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி – 5 அமைச்சர்கள் குழு இன்று பார்வை

கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக, பாதிக்கப்பட்ட பகுதிகளை 5 அமைச்சர்கள் குழு இன்று பார்வையிடுகிறது.

கஜா புயல் நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ளது. கோரத் தாண்டவமாடிய கஜா புயலால், நாகை மாவட்டம் வேதாரண்யம் அதிகம் பாதிப்புக்குள்ளானது. 110 கிமீ வேகத்தில் காற்று வீசியதால், 13 ஆயிரம் மின் கம்பங்களும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களும் சாய்ந்துள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், புயலால் ஏற்பட்ட சேதங்களை, மின்சாரத்துறை அமைச்சர் பி. தங்கமணி, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பேரிடர் மேலாண்மை இயக்குனர் சத்யகோபால் ஐ.ஏ.எஸ் ஆகியோர் இன்று பார்வையிடுகின்றனர்.

 

Exit mobile version