பழவேற்காட்டில் உள்ள வரலாற்று புகழ்பெற்ற புனித மகிமை மாதா ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் உள்ள வரலாற்று புகழ் பெற்ற புனித மகிமை மாதா ஆலயத்தின் 504 ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயிலை கிறிஸ்தவ மறை மாவட்ட பேராயர் அந்தோணி சாமி, குரியன் தாமஸ், தாமஸ் சைமன் பங்கேற்று, மகிமை மாதா திருவுருவ கொடியேற்றி தேர் திருவிழாவை தொடக்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து கூட்டு திருப்பலி பிரார்த்தனையும், நாட்டை காக்கும் வீரர்களின் நலன் வேண்டியும், இலங்கை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களின் ஆன்மா சாந்தியடையவும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த விழாவில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி வரும் 4 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.