காலிங்கராயன் தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும் முதல்வர் அறிவிப்பு

காலிங்கராயன் தினத்தை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்ட விவசாயிகள் பாசன வசதிக்காக 737 ஆண்டுகளுக்கு முன்பாக பவானி ஆற்றைத் தடுத்து அதன் குறுக்கே தடுப்பணை கட்டி 90 கிலோ மீட்டர் கால்வாயை அமைத்தவர் காலிங்கராயன். பொதுமக்கள் நலனுக்காக கால்வாயை வெட்டி சமர்ப்பித்த நாளான தை மாதம் 5ம் தேதியை காலிங்கராயன் தினமாக விவசாயிகள் கொண்டாடி வருகின்றனர். காலிங்கராயனை பெருமைப்படுத்தும் விதமாக அவரது முழு உருவ வெண்கல சிலை உடன் கூடிய மணி மண்டபத்தை கடந்த ஆண்டு மே மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்நிலையில், வாய்க்கால்களை காலிங்கராயன் நாட்டுக்கு அற்பணித்த தை 5ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று விதி எண் 110ன் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version