அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி அருகே திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ காமராஜ் உள்ளிட்ட சிலர் காவல்துறையினரை மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலாயுதம்பாளையம் பைபாஸ் ரவுண்டானாவில், தேர்தல் விதிமுறைகளை மீறி திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். வாக்குச் சாவடிக்கு 200 மீட்டருக்குள் வாக்காளர்களிடையே திமுக சின்னத்திற்கு வாக்குகளிக்குமாறு கூறி அவர் ஆதரவு திரட்டினர். இதை போலீசார் தடுக்க முயன்ற போது, திமுக முன்னாள் எம்.எல்.ஏ காமராஜ் தலைமையில் ஒரு கும்பல் மிரட்டல் விடுத்தது. காவல் துறையினரை திமுகவினர் மிரட்டியதோடு, அராஜகத்திலும் ஈடுபட முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவியது.