மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 6 ,043 கனஅடியாக நீடிப்பு

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 6 ஆயிரத்து 43 கனஅடியாக நீடித்து வருகிறது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவானது நேற்றைய நிலையை நீடித்து வருகிறது. அதன்படி, அணைக்கு வரும் நீர் வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 43 கன அடியாக உள்ளது. காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சியாகவும் உள்ளது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 5 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

 

Exit mobile version