அமர்நாத் யாத்திரை ஜூன் மாதம் 23ம் தொடங்கும் என ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோயிலில் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்வது வழக்கம்.அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பகல்காம், கந்தமால் மாவட்டத்தில் உள்ள பால்டால் ஆகிய இரண்டு பாதைகள் வழியாக அமர்நாத் யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தாண்டிற்கான அமர்நாத் யாத்திரை ஜூன் மாதம் 23ம் தேதி தொடங்கும் என ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது. அம்மாநில ஆளுநர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மொத்தம் 42 நாட்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 3ம் தேதியுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.