கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக 10.26 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக 10.26 பில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சீன நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக 10.26 பில்லியன் அமெரிக்க டாலரை சீன அரசு ஒத்துக்கீடு செய்துள்ளது.

இந்த நிதி மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் சீன அரசு முடிவு செய்துள்ளது. நாட்டிலுள்ள மாகாணங்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட நிதி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவும் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் சீன நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version