திமுக கூட்டணி கோடிகளுக்காகச் சேர்ந்த கூட்டணி என்பது நிரூபணமாகியுள்ளது

திமுக சார்பில் கூட்டணிக் கட்சிகளுக்குத் தேர்தல் செலவுக்கு 40 கோடி ரூபாய் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளதில் இருந்து, அந்தக் கூட்டணி கோடிகளுக்காகச் சேர்ந்த கூட்டணி என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான செலவுக் கணக்கைத் தேர்தல் ஆணையத்திடம் திமுக அளித்துள்ளது. அதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 15 கோடி ரூபாயும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 கோடி ரூபாயும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 15 கோடி ரூபாயும் என மொத்தம் நாற்பது கோடி ரூபாயை கூட்டணி கட்சிகளுக்கு தேர்தல் செலவுக்கு நன்கொடையாக வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளது.

செய்தித்தாள், தொலைக்காட்சி, இணையத்தளங்கள் ஆகியவற்றில் விளம்பரம் செய்வதற்காக 15 கோடியே 46 லட்ச ரூபாய் செலவிட்டுள்ளதாக திமுக குறிப்பிட்டுள்ளது. இதில் சன் தொலைக்காட்சிக்கு 3 கோடியே 9 லட்ச ரூபாயும், தினகரன் நாளிதழுக்கு 68 லட்ச ரூபாயும், சூரியன் FM-க்கு 28 லட்ச ரூபாயும் திமுக வழங்கியுள்ளது.

கலைஞர் தொலைக்காட்சிக்கு ஒரு கோடி ரூபாயும், கூகுள் நிறுவனத்துக்கு 2 கோடி ரூபாயும் விளம்பரத்துக்காகச் செலவிட்டுள்ளது. மற்ற ஊடகங்களில் விளம்பரத்துக்காக மொத்தம் 8 கோடியே 30 லட்ச ரூபாயைச் செலவிட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கும் சேர்த்துத் திமுகவே விளம்பரச் செலவு செய்துள்ளது. இதன் மூலம் திமுக கூட்டணி கோடிகளுக்காகச் சேர்ந்த கூட்டணி என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version