மாம்பழங்கள் மட்டுமின்றி வாழை, ஆப்பிள் திராட்சை போன்ற பழங்களும் செயற்கையாக பழுக்க வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாம்பழங்கள் மட்டுமின்றி எல்லா பருவத்திலும் கிடைக்கும் பழங்களும் செயற்கை முறையில் மருந்துகள் தெளித்தும் கார்பைடு கல் பயன்படுத்தியும் பழுக்க வைக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதனால் பழங்களை வாங்கவே பொது மக்கள் அச்சப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அவ்வாறான செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்களால் உடல் சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் சந்தைகளில் தீடீர் சோதனைகளில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஒரே நேரத்தில் அனைத்து பழங்களையும் பழுக்க வைக்க முயற்சிக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.