அஜ்மத் பீவி தர்காவில் 77வது சந்தனக்கூடு விழா கோலாகலம்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே அன்னை அஜ்மத் பீவி தர்காவின் 77வது ஆண்டு சந்தனக்கூடு கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

சீர்காழி அருகே மேலச்சாலையில் அமைந்துள்ள அன்னை அஜ்மத் பீவி தர்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு 77வது சந்தனக்கூடு திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதையடுத்து தொடர்ந்து ஒருவார காலம் சிறப்பு பாத்தியாக்கள் ஓதப்பட்டு, முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு வைபவம் அதிகாலையில் நடைபெற்றது. சந்தனம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அன்னை அஜ்மத் பீவி தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் கோலாகலமாக நடைபெற்றது. சிறப்பு வழிபாடும் மேற்கொள்ளப்பட்டது. இதில் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version