வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலுக்கு ஃபானி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாழ்வுப்பகுதியானது அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று, அதன்பின்னர் புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கையின் கிழக்கு கடற்கரை மற்றும் வடக்கு தமிழகத்தின் கடலோர பகுதியை சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது காற்றின் வேகம் 65 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.