டெல்லியில் இன்று காலை காற்று மாசு அபாய கட்டத்தை தாண்டியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தலைநகர் டெல்லியில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டு வருகிறது. இதனால் டெல்லி மக்கள் கடும் சிரமத்திற்கும் பல்வேறு மூச்சு தொடர்பான அவதிகளுக்கும் உள்ளாகி வருகின்றனர். காற்று மாசை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
இந்தநிலையில், இன்று காலை டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்பட்டது. மந்திர் மர்க், ஜவஹர்லால் நேரு மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் அபாய கட்டத்தை தாண்டியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். காலையில் நடைபயணம் மேற்கொண்டவர்கள் முகத்தில் முகமூடி அணிந்து சென்றனர். மேலும் காற்று மாசால், காலையில் வாகன ஓட்டிகளும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.