40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்

அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் சார்பில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். சென்னை கிளாம்பாக்கத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்வது குறித்த மனுவை பிரதமர் மோடியிடம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version