ஏழை மக்களை கருத்தில் கொண்டே அதிமுக தேர்தல் அறிக்கை அமையும்

ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்தை முக்கியமாக கொண்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கை அமையும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கென நாடெங்கிலும் பல்வேறு முன் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வருகிறது. தமிழகமும் மக்களவை தேர்தலுக்கென தயாராகி வருகிறது.

தமிழக மாவட்டங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்கள் இன்றுமுதல் 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் ஆலோசனைக் குழுவின் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அமைப்புச் செயலாளர்கள், பொன்னையன், நத்தம் விசுவநாதன், செம்மலை, பி.எச். மனோஜ் பாண்டியன் அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம், மாநிலங்களவை உறுப்பினர் ரபி பெர்னார்டு உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

Exit mobile version