சிறுபான்மை பிரிவினரின் வாக்குகள் அதிமுகவுக்கு நிச்சயம் கிடைக்கும்…

சிறுபான்மை மக்களுக்கு அதிமுக என்றும் பாதுகாவலனாக இருக்கும் என்று, ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் அவர் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பள்ளிகொண்டாவில் தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் கே.சி.வீரமணியுடன் சேர்ந்து ஏ.சி. சண்முகம் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், சிறுபான்மை பிரிவினரின் வாக்குகள் அதிமுகவுக்கு நிச்சயம் கிடைக்கும் என்றார். சிறுபான்மை பிரிவு மக்களுக்கு பாதுகாவலனாக அதிமுக அரசு பாதுகாப்பாக இருப்பதை சுட்டிக் காட்டிய அவர், 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி எதையும் சாதிக்க முடியாத நிலையில் இருப்பதாக விமர்சித்தார்.

தொண்டர்களியை உரையாற்றிய அமைச்சர் கே.சி.வீரமணி, திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்து விட்டதாகவும், ஆனால், வேலூர் தொகுதி மக்கள் அதிமுக கூட்டணிக்கே வாக்களிப்பார்கள் எனவும் கூறினார். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலனாக அதிமுக திகழ்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

Exit mobile version