ஊரக உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது.அதில் அ.தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி மொத்தம் 12 இடங்கள் அதில் 9 இடங்களை அதிமுக கைப்பற்றி வெற்றிபெறுள்ளது.அதே இடத்தில் திமுக 3 இடங்களை மட்டுமே கைப்பற்றி உள்ளது.
கரூர் மாவட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவி மொத்தம் 115 இடங்கள் அதில் 80 இடங்களை அதிமுக கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது.எதிர்த்து போட்டியிட திமுக 34 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.
கரூர் மாவட்டத்தில் அதிக வாக்குகள் பெற்று அதிமுக வெற்றிபெற்றதால் எதிர்க்கட்சியினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.