திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட பெறப்பட்டுள்ள விருப்ப மனுக்கள் குறித்து ஆலோசிக்க ஆட்சிமன்றக்குழு நாளை கூடுகிறது.
தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருவாரூர் தொகுதி, அவரது மறைவுக்கு பின் காலியானது. அங்கு ஜனவரி 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுக நிர்வாகிகளிடம் ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. விண்ணப்பம் பெறப்பட்டவர்களிடம் நாளை அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேர்க்காணல் நடத்துகின்றனர். அதன் பின்னர் ஆட்சிமன்றக்குழு கூட்டப்பட்டு, இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கப்படும்.