காவிரியிலிருந்து தமிழகத்திற்கான நீரை உடனடியாக விடுவிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் நேற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்திய பிறகு, மாநிலங்களவை இன்று வழக்கபோல் கூடியது. அப்போது பேசிய அதிமுக எம்.பி விஜிலா சத்யானந்த், தமிழகம் நீர் பற்றாக்குறை நிறைந்த மாநிலம் என தெரிவித்தார். தமிழகத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்வதில் காவிரி ஆறு பிரதான பங்குவகிப்பதாக கூறிய அவர், காவிரி நீர் நிர்வாகத்தின் முழு அதிகாரத்தையும் மத்திய அரசு எடுத்துக்கொண்டு, உடனடியாக தமிழகத்திற்கான நீரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தினார். தமிழகத்தின் நீர் தேவையை நிவர்த்தி செய்ய, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், நாடாளுமன்றத்தில் காவிரி விவகாரம் குறித்து அதிமுக எம்.பி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.