அதிமுக யாரும் வீழ்த்த முடியாத வலிமையான கட்சி: தம்பிதுரை

அதிமுக யாரும் வீழ்த்த முடியாத வலிமையான கட்சி என்றும், நாடாளுமன்ற தேர்தலில் வலிமையான கூட்டணி அமைக்கும் எனவும், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கரூரில் 21 கோடி ரூபாய் மதிப்பில் இணைப்பு சாலை அமைப்பது தொடர்பான பூமி பூஜையில் கலந்து கொண்ட அவர், நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக பொதுவான கொள்கைகளின் அடிப்படையில் கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

Exit mobile version