உழைப்பவர்களுக்கு தேடி சென்று பதவி கொடுக்கும் ஒரே கட்சி, அதிமுக மட்டுமே என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், வீராணமூரில் அதிமுக வல்லம் ஒன்றிய கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு, நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அதிமுகவில் இணைந்த தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், உழைப்பவர்களுக்கு தேடிச் சென்று பதவி கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக மட்டுமே என்று கூறினார். எனவே தொண்டர்கள் நம்பிக்கையோடு களப்பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.