தங்கள் கட்சியினருக்கு மட்டுமே வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என திமுக துணை செயலாளர் கூறியதை அடுத்து, மனமுடைந்த பெண் சுகாதார பரப்புரையாளர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் நதியா, வேம்பு, ராதிகா, ஜெயா ஆகிய 4 பெண்கள் சுகாதார பரப்புரையாளர்களாக கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தனர்.
தற்காலிகமாக பணியாற்றி வந்த இவர்களது ஒப்பந்தம் ஜூலை மாதத்துடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், திமுகவினரின் தலையீட்டால் இந்த நான்கு பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், திமுகவைச் சேர்ந்தவர்களுக்கு பணிகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, மீண்டும் பணி வழங்க நதியா என்பவர் திமுக துணை செயலாளர் என்பவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், ஆட்சி மாறிவிட்டால் பணியாளர்களும் மாற்றப்படுவார்கள் என தெரிவித்தார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத நதியா மனமுடைந்து வீட்டில் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பிரச்சனை தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் குத்தாலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர், நதியாவின் மரணத்திற்கு காரணமான திமுக பிரமுகர் மீது புகார் அளித்துள்ளனர்.