தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என்பதே அதிமுக அரசின் நிலைப்பாடு என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் உள்ள பள்ளி விழாவில் கலந்துகொண்ட தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முப்படைகளுக்கு ஒரே தளபதியை நியமிப்பது குறித்த மத்திய அரசின் முடிவுக்கு வரவேற்புத் தெரிவித்தார்.
நீட் தேர்வுக்கு விலக்களிக்கக் கோரும் தீர்மானம் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டின் மீதான திமுக கருத்தை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என்பதே அரசின் நிலைப்பாடு எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.