அதிமுக அரசு ஐந்து ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்யும் : இல.கணேசன்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக அரசு முழுமையாக ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யும் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து காரமடை பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், மக்களவைத் தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும், இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று குறிப்பிட்டார்.

காவலாளிகளுக்கு கயவாளிகளுக்கும் இடையே நடைபெறும் இந்தத் தேர்தலில் காவலாளியான நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெறுவார் என்று அவர் தெரிவித்தார். பிரசாரத்தின் போது அவருடன் அதிமுக, பாஜக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Exit mobile version