9 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது அதிமுக அரசு

9 லட்சம் பேருக்கு அதிமுக அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்திருப்பதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலகம் சார்பில், தனியார் துறை வேலை வாய்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் தேர்வானவர்களுக்கு அமைச்சர் மணிகண்டன் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மணிகண்டன், இளைஞர்களுக்கு பணி கிடைக்க பெறுவதற்காக தொடர்ந்து வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும் என தெரிவித்தார். மேலும் 9 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக கூறிய அவர், இன்னும் பல நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை வழங்க தயாராக இருப்பதாக கூறினார்.

Exit mobile version