அதிமுக அரசு யாருக்கும் அஞ்சும் அரசு இல்லை என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சர் இப்படிதான் பேச வேண்டும் என யாராலும் உத்தரவிட முடியாது என்றும், அமைச்சரை மிரட்டும் வகையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசக்கூடாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மேலும் அனைத்து துறைகளையும் கணக்கிட்டுதான், தமிழகம் சிறந்த மாநிலம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு பதிலளித்த அவர், செயற்கையாக தரவரிசை வெளியிடப்படவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.