மக்கள் விரும்பாத எந்தவொரு திட்டத்தையும் அதிமுக செயல்படுத்தாது அமைச்சர் காமராஜ் தகவல்

ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மக்கள் விரும்பாத எந்தவொரு திட்டத்தையும் அதிமுக செயல்படுத்தாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.திருவாரூர் மாவட்டம், தண்டலை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது என்றார்.

Exit mobile version