சென்னை நீலாங்கரையில் போதை பொருள் விற்பனை செய்து வந்த ஆப்பிரிக்க நாட்டு இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர். சென்னை அடுத்த நீலாங்கரை பகுதியில் போதை பொருள் விற்பனை நடப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார், போதைப்பொருள் விற்பனை செய்து கொண்டிருந்த ஆப்பிரிக்காவை சேர்ந்த இக்கெக் வூ என்ற நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்த கேட்டமைன், கோகைன் உள்ளிட்ட 6 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.