படத்தின் பிரமோஷனுக்காக திரையரங்கில் டிக்கெட் விற்ற பிரபல நடிகை

படத்தின் பிரமோஷனுக்காக நேரடியாக திரையரங்கிற்கு சென்று பிரபல நடிகை டிக்கெட் விற்றுள்ள செயல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு  ராஷி கண்ணாஅறிமுகமானவர்.  தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் அடங்கமறு, அயோக்யா, சங்கதமிழன் ஆகிய படங்களில் நடித்து தமிழில் ரசிகர்கள் தனக்கென பட்டாளத்தை ராஷி கண்ணா உருவாக்கியவர்.

இதனை தொடர்ந்து தெலுங்கில் சாய் தேஜா, ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள “Prati Roju Pandage” என்ற  படம்  இன்று வெளியாகிறது. படங்களை தயாரிப்பதை விட அந்த படத்தை மக்களிடம் அதிகம் கொண்டு போய் சேர்க்க  படக்குழு அதிகம் போராடி வருகின்றனர். அப்படி தங்களது படத்தை பிரமோட் செய்ய பலரும் வித்தியாசமான முறையில் யோசிக்கின்றனர்.  ஹாலிவுட்டில் திரைப்படங்களுக்கு அதன் நடிகர்களே மக்களிடம் நேரடியாக இறங்கி பிரமோஷன் செய்வது போல்  நடிகை ராஷி கண்ணாவும் தனது படத்தின் பிரமோஷனுக்காக ஹைதராபாத்தில் உள்ள பிரபல திரையரங்கில் டிக்கெட் விற்கும் பணியில் இறங்கியுள்ளார். தற்போது இந்த செயல் ராஷி கண்ணா ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது

Exit mobile version