கடந்த சட்டமன்றத் தேர்தலில் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத 53 பேர் தேர்தலில் போட்டியிட முடியாது எனத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சத்யபிரதா சாஹூ, சட்டமன்றத் தேர்தலை பொறுத்த வரைக்கும் வேட்பாளர்கள் 28 லட்சம் ரூபாய் வரையும், நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை 70 லட்சம் வரையும் செலவு செய்ய விதிமுறை உண்டு என்றார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் செலவுக் கணக்கை தேர்தல் முடிந்து, ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்காத 53 பேர் 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் வாக்குப் பதிவு விகிதம் குறைவாக உள்ள இடங்களில், வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் சத்யபிரதா சாஹூ கூறினார்