1983ல் உலகக் கோப்பையை வென்றதை மையமாக கொண்டு உருவாகியுள்ள, ‘83’ திரைப்படம்

1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்றதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள, ‘83’ திரைப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கலந்து கொண்டார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கபில்தேவ் ஸ்ரீகாந்த், 83 திரைப்படத்தில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் நடித்துள்ள நடிகர் ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், ஒரு கிரிக்கெட் வீரராக மிகவும் பிடித்த இடம் சென்னை சேப்பாக்கம் மைதானம் தான் எனவும், தற்போது உள்ள தலைமுறைகள் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

Exit mobile version