82 வயதான மூதாட்டி ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி தேர்வு

நாமக்கல் மாவட்டம், புஞ்சை புதுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக, 82 வயதான மூதாட்டி ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புஞ்சை புதுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, வேறு யாரும் போட்டியிடாததால் 82 வயதாகும் நல்லம்மாள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் நல்லமாளின் மருமகள் மல்லிகா ஊராட்சி தலைவராக பொறுப்பேற்று, அப்பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்துக் கொடுத்துள்ளார். மல்லிகா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், தற்போது நல்லமாள் போட்டியிட்டார். நல்லம்மாளை எதிர்த்து எந்த வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

Exit mobile version