கமுதி அருகே உள்ள தரைகுடியில் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்ட 73 வயது மூதாட்டி 60 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் .
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள தரைகுடியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தங்கவேல் என்ற 73 வயதான மூதாட்டி போட்டியிட்டார். மூதாட்டி தங்கவேல் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 62 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அந்த மூதாட்டிக்கு கிராம மக்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய மூதாட்டி தங்கவேல், கிராமத்திற்கு சேவை செய்வதற்காக மக்கள் தன்னை வெற்றி பெற வைத்துள்ளனர் என்று கூறினார். மேலும், தமிழக அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.