5வது நாளை எட்டிய இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை முன்னிறுத்தி ஐந்தாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுடைய கோரிக்கை நிறைவேறும்வரை இந்த போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர். தொடர் உண்ணாவிரதத்திலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் 120க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்ப்டடுள்ளனர்.

ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டி தாங்கள் விடுத்துவரும் தொடர் கோரிக்கைகளை, அரசு பரிசீலிக்க வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Exit mobile version