5வது நாளாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை 5வது நாளாக இன்றும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. கடந்த வாரம் வரை இறங்கு முகத்தில் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை, சில தினங்களாக உயர்த்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், 5வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 40 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 72 ரூபாய் 79 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 53 காசுகள் உயர்ந்து 67 ரூபாய் 78 காசுகளுக்கு விற்பனை ஆகிறது.

Exit mobile version