கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க போராடிய தியாகி மார்ஷல் நேசமணியின் 51வது நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கேரளாவுடன் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க நடைபெற்ற போராட்டத்தை தியாகி மார்ஷல் நேசமணி தலைமையேற்று நடத்தினார். இதன்காரணமாக 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைக்கப்பட்டது. இதனிடையே மார்ஷல் நேசமணியை கவுரவிக்கும் வகையில் 2014ஆம் ஆண்டு நாகர்கோவிலில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டது. இந்தநிலையில் மார்ஷல் நேசமணியின் 51வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் ரேவதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது மாவட்ட உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.