கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று தொடங்கியுள்ளது

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று தொடங்கியுள்ளது. இதனையொட்டி, தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவுக்கு முன்பாக 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் தவக்காலம் துவங்கும் புதன்கிழமையன்று குறுத்தோலையை எரித்து சாம்பல் நெற்றியில் பூசப்படுவதால் அந்நாளை சாம்பல் புதன் என்று அழைக்கின்றனர். அதனடிப்படையில் இந்தாண்டு கிறிஸ்துவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் இன்று தொடங்கியது. இதையொட்டி, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அமல அன்னை ஆலயத்தில் நெற்றியில் குறுத்தோலை சாம்பல் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்

Exit mobile version