4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடூரன்

சென்னையில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…

சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் பகுதி அந்தோணி நகரில் வசித்து வரும் தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.குழந்தைகள் இருவரும் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

இந்நிலையில் வீட்டில் 4 வயது பெண் குழந்தையை மட்டும் தனியாக விட்டுவிட்டு 8 வயது மகனை டியூசனுக்கு அழைத்து சென்றுள்ளார் அவரது தாய்.

சிறிது நேரத்திற்கு பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது பெண் குழந்தையை காணவில்லை. உடனே அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார் தாய். ஆனால் 4 வயது பெண் குழந்தையை எங்கு தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த கணவர், மனைவியுடன் சேர்ந்து சிறுமியை வீட்டிற்கு அருகில் தேடியுள்ளனர். அப்போது வீட்டின் கழிவறையில் இருந்த வாளியில் ரத்தக்கறையுடன் இருந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தனர். அப்போது அவர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி.அந்த சாக்கு மூட்டையில் தங்களது 4 வயது பெண் குழந்தை சடலமாக இருந்ததை பார்த்து இருவரும் அதிர்ந்து போனார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருமுல்லைவாயில் போலீசார் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில்… சிறுமியின் உறவினரான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் என்ற கொடூரன் 4 வயது சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து சிறுமியை பாலியல் வந்துகொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்திருக்கிறான். அந்த கொடூரனின் படுக்கையறையில் சிறுமியின் கம்மல் மற்றும் உடைந்த வளையல் இருந்ததை கண்டு போலீசார் துருவி துருவி விசாரித்ததில் உண்மையை ஒப்புக் கொண்டான்.

4 வயது சிறுமியின் இறப்பிற்கு நீதி வேண்டியும்…பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரனுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கூறி உறவினர்களும் பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Exit mobile version