நாட்டில் விற்பனையில் உள்ள 37 மருந்துகள் தரமற்றவை

நாட்டில் விற்பனையில் உள்ள 37 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

நாட்டில் விற்பனை செய்யப்படும், அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளை, மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாடு வாரியம், மாதந்தோறும் ஆய்வு செய்கின்றன. அதன்படி, நவம்பரில், ஆயிரத்து 158 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், ஆயிரத்து 121 மருந்துகளின் தரம் உறுதி செய்யப் பட்டுள்ளது. ஆனால், வாயுப் பிரச்னை, குடற்புழு நீக்கம், வயிற்று உபாதைகள் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தப்படும், 37 மருந்துகள் போலியானதாகவும், தரமற்றதாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.இந்த விபரங்களை, மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம், cdscoonline.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

Exit mobile version