திருவண்ணாமலை கோயிலில் தெப்ப உற்சவ விழா

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக் கோயிலில் தெப்ப உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 10 நாட்களும் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 10ம் தேதி மாலை 6 மணியளவில் 2 ஆயிரத்து 668 உயரம் உள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபம் ஏற்றபட்டது. இதனை தொடர்ந்து கார்த்திகை தீபத்திருவிழாவின் 2-ம் நாளில் அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் 14 கிலோ மீட்டர் கிரிவலம் சென்றனர். அதனையடுத்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த சப்பரத்தில் ஸ்ரீபராசக்தியம்மன் எழுந்தருளி ஐயப்பங்குளத்தை சுற்றி 3 முறை வலம் வந்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version