25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சுவிட்சர்லாந்தில் இன்று தொடங்குகிறது.

இந்திய நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த நிலையில் இந்த போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் முனைப்பில் அவர் களமிறங்கியுள்ளார். இதேபோல் மற்றொரு வீராங்கனையான சாய்னா நோவலும் பதக்கம் வெல்லும் லட்சியத்துடன் உள்ளார். சாய்பிரணித், பிரணாய் உள்ளிட்ட வீரர்களும் பதக்கம் வெல்லும் நோக்கில் களத்தில் உள்ளனர். இன்று தொடங்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் 25ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

Exit mobile version