17வது மக்களவை இறுதிக்கட்ட தேர்தல் இன்று வாக்குப்பதிவு

17வது மக்களவைக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்குகிறது.

நாடு முழுவதும் 2 மாதமாக நடந்து வந்த மக்களவை தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்ட தேர்தலில் இதுவரை 6 கட்டங்களுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 59 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்குவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்றையதினம் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பீகாரில் 8 தொகுதிகள், ஜார்க்கண்டில் 3, மத்தியப் பிரதேசத்தில் 8, பஞ்சாபில் 13, சண்டீகரில் 1, உத்தரப் பிரதேசத்தில் 13, இமாசல பிரதேசத்தில் 4, மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள் என மொத்தம் 59 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. பீகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அவரை எதிர்த்து காங்கிரசில் இணைந்த நடிகர் சத்ருகன் சின்ஹா, பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் பாஜக சார்பில் நடிகர் சன்னி தியோல், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர் உள்ளிட்ட 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேலும் 10 கோடியே 17 லட்சம் பேர் வாக்களிக்க இருக்கின்றனர்.

Exit mobile version