லாரியில் கடத்தி வரப்பட்ட 17, 500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

வேலூர் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 17 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்

வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை சுங்கசாவடி வழியாக சிலர் மத்திய பிரதேசத்தில் இருந்து தமிழகத்திற்கு, லாரியில் எரிசாராயம் கடத்துவதாக மதுவிலக்கு அமல்பிரிவு தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலில் அடிப்படையில் வேலூர் ஏ.டி.எஸ்.பி தலைமையிலான காவல்துறையினர் நடத்திய சோதனையில் மருந்துப்பொருட்கள் எனக்கூறி, எரிசாராயம் கடத்தியது தெரியவந்தது. இதில் 500 எரிசாராய கேன்களில் 17 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயம் பிடிபட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சாராய கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர் . 2 லாரிகள் மற்றும் 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இப்பொருட்களின் மதிப்பு சுமார் 80 லட்சம் இருக்கும் என காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version